REGULAR PROMOTION – MACP UPGRADATION – PAY FIXATION
சமீபத்தில் ‘SWAMYS NEWS’புத்தகத்தில் ஒரு ஊழியர் கேள்வி கேட்டு பதிலை பெற்று இருந்தார். ACP or MACP மூலமாக பதவி உயர்வு பெற்ற பின், REGULAR PROMOTION கிடைத்தால் மீண்டும் ஒரு முறை PAY FIXATION செய்யப்படுமா…? இது தான் அந்த கேள்வியின் சாராம்சம்.
REGULAR PROMOTION கிடைக்கவில்லை என்பதால் மட்டுமே MACP மூலம் பதவி உயர்வு தரப்படுகிறது. 3% INCREMENT மற்றும் GRADE PAY வித்தியாசத்தை சேர்த்து PAY FIXATION செய்யப்படுகிறது. அதனால் REGULAR PROMOTION வரும் போது PAY FIXATION செய்யாமல், GRADE PAY வித்தியாசம் இருந்தால் மட்டுமே சேர்க்கப்படும்.
ஒரு வேளை மீண்டும் PAY FIXATION செய்யப்படுமேயானால், SENIOR – JUNIOR இடையே பெரிய குழப்பம் தான் ஏற்படும்.
‘X’ Employee 2800-லிருந்து 4200-க்கு REGULAR PROMOTION வாயிலாக பதவி உயர்வு பெறுகிறார். அவருடைய JUNIOR‘Y’ Employee2800-லிருந்து 4200-க்கு MACP வாயிலாக பதவி உயர்வு பெறுகிறார் என வைத்துக்கொள்வோம்.
இரண்டாவது முறை PAY FIXATION செய்தால் SENIOR- விட JUNIOR அதிக சம்பளம் பெரும் நிலை ஏற்பட்டுவிடும்.
Leave a Reply