OROP அறிவிப்பு குறித்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது..!
“ONE RANK ONE PENSION திட்டம் குறித்த அறிவிப்பு AUGUST 15 அன்று வெளியிடப்படும் என்ற செய்தி மூலம், மீண்டும் ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது..!”
நாடு முழுவதிலும் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான முன்னாள் ராணுவ வீரர்களின் நீண்ட கால கோரிக்கையான ONE RANK ONE PENSION என்ற திட்டம் நிறைவேறும் நாள் நெருங்கி விட்டதாகவே உணரப்படுகிறது.
ஆனால், இதே போன்ற ஒரு மாபெரும் எதிர்ப்பார்ப்பு கடந்த 25.5.2015 அன்று உருவானது நினைவிருக்கலாம். ஓராண்டு ஆட்சி நிறைவு பேரணியில் மோடி அவர்கள் இத்திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்ற செய்தி மாபெரும் எதிர்ப்பார்ப்பினை உருவாகியது. ஆனால், பிரமாண்ட பேரணியினை பார்வையிட்ட பின் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள், ஒரு வார்த்தை கூட இத்திட்டம் குறித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இத்திட்டத்தை அமுல்படுத்தக்கூடிய சாத்தியகூறு அரசுக்கு இருப்பதாக, கடந்த சில நாட்களாகவே வெவ்வேறு வடிவிலான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக டெல்லி ஜந்தர் மந்தர்-ல் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொய்வு இல்லாமால், துடிப்புடன் UFESM என்ற அமைப்பு நடத்தி வருவது கவனிக்கதக்கது. இவர்களின் இடைவிடாத போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஆயுத்தமாகி வருகிறது. பீகார் தேர்தல் களத்தில் ஆளும் மத்திய அரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய ஆலோசித்து வருகிறார்கள். ஒருவேளை ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் OROP திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடவில்லை என்றால் இவர்களின் போராட்டம் நிச்சயம் திசைமாறும். ஆனால், இதற்கு வாய்ப்பில்லை என்றே ஊடக செய்திகள் உறுதி படுத்துகின்றன.
நிதி அமைச்சரை நேற்று முன்தினம் சந்தித்த UFESM-ன் முக்கிய பிரமுகர் ராஜ் கடையன் அவர்கள், இத்திட்டத்தை அரசு நடைமுறைபடுத்துவதில் உள்ள அக்கறை மீது நம்பிக்கை தெரிவித்துள்ளார். எங்களது கோரிக்கைகளை கவனமுடன், அமைதியாக கேட்ட நிதி அமைச்சர், உங்களது எண்ணம் நிறைவேறும் தருணம், சில மாதங்களுக்கு பின் அல்ல…சில நாட்களுக்குள் என்று கூறினார். இது ஆகஸ்ட் 15 என்று சூசகமாக கூறியாதகவே தெரிகிறது.
நேற்று பிரதம மந்திரி அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்களின் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. முக்கிய முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இருப்பினும், நல்ல முடிவு ஒன்றினை பிரதமர் ஆகஸ்ட் 15 அன்று அறிவிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.
பிரதமந்திரியின் 69-வது சுதந்திர தின விழா உரையில் OROP திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கை முன்னாள் படைவீரர்களிடம் மீண்டும் உருவாகி உள்ளது.
Leave a Reply