மத்திய அரசு பணியில் சேருபவர்களின் முதல் மாத சம்பளம் எவ்வளவு?
“மத்திய அரசு பணியில் சேரும் ஒருவரின் முதல் மாத சம்பளம் எவ்வளவு என தெரிந்து கொள்ளும் ஆர்வம், ஒவ்வொரு வேலை தேடும் இளைஞரிடத்தில் உள்ளது”
படிப்பை முடித்துக்கொண்டு வேலை தேடும் ஒவ்வொரு இந்திய இளைஞருக்கும் மத்திய அரசு பணியில் சேரவேண்டும் என்ற ஆசை இருப்பதை மறுக்க இயலாது. நிரந்தர வேலை, கணிசமான சம்பளம், விடுமுறை, ஓய்வூதியம் மற்றும் பல சலுகைகள் காரணம் என்பது ஊரறிந்த உண்மை..!
7வது ஊதியக்குழு தனது அறிக்கையில், மத்திய அரசு பணியில் 40,48,707 ஊழியர்கள் பணியாற்றவேண்டிய இடத்தில், 33,01,536 ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளததாக குறிப்பிடுகிறது. அதாவது, ஜனவரி 2014 நிலவரப்படி, 7,47,171 பணி இடங்கள் காலியாக உள்ளது என புள்ளிவிபரங்களுடன் தெரிவிக்கிறது.
தற்போது மத்திய அரசு பணியில் உள்ள ஒட்டுமொத்த ஊழியர்களில் 50 வயதை தாண்டியவர்கள், 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என 9,47,586 ஊழியர்கள் பணியில் இருப்பதாக பிரித்து கணக்கெடுத்துள்ளார்கள். சராசரியாக வருடத்திற்கு ஒரு லட்சம் ஊழியர்கள் (தோராயமாக) பணி ஓய்வு பெறக்கூடும் எனபதால், மத்திய அரசு ஊழியர்களுக்கான தேவை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது.
மத்திய அரசு பணி நியமனங்களுக்காக UPSC மற்றும் SSC என்ற இரண்டு அமைப்புகள் உள்ளது. ஜனவரி 2004 முதல் 2014 வரையிலான காலங்களில், 11,13,329 பணி நியமன ஆணைகள் மத்திய அரசின் பல்வேறு துறைகளால் வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை தற்போது A, B மற்றும் C என மூன்று நிலைகளாக பிரிக்கப்படுகின்றனர். இந்த நிலைகளை கொண்டே, ஒரு ஊழியரின் பதவி, அடிப்படை சம்பளம் மற்றும் படிகள் என அனைத்து விதமான சலுகைகளும் பிரித்து வழங்கப்படுகின்றன. ஜனவரி 2014 நிலவரப்படி, Group ‘A’ பிரிவில் 91,501 உயர் அதிகாரிகள், Group ‘B’ பிரிவில் 2,80,892 அதிகாரிகளும் மற்றும் Group ‘C’ பிரிவில் அதிகபட்சமாக 29,29,143 ஊழியர்களும் பணியில் உள்ளனர்.
2012-13 ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் படிகள் வழங்கியதற்கான செலவு 1,29,599 கோடி. இத்தொகை நம் நாட்டு GDP-ல் 1.30 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 7வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பளம் மற்றும் படிகள் வழங்கப்பட்டு வருகிறது. 7வது ஊதியக்குழுவின் குறைந்தபட்ச ஊதியம் 18,000 மற்றும் அதிகபட்சம் 2,25,000. கீழே உள்ள அட்டவணை 1வது ஊதியக்குழு முதல் 6வது ஊதியக்குழு வரையிலான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சம்பளத்தை குறிப்பிடுகிறது.
6வது ஊதியக்குழு GRADE PAY என்ற அளவுகோல் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்தது. தற்போது 7வது ஊதியக்குழு LEVEL என்கிற அளவுகோல் அடிப்படையில் அடிப்படை சம்பளத்தை நிர்ணயம் செய்கிறது. புதிதாக மத்தியஅரசு பணியில் சேர தகுதியான நபர்களை தேடும் அறிக்கையில் பதவியின் பெயர் மற்றும் GRADE PAY அல்லது LEVEL என குறிப்பிடப்பட்டிருக்கும். கீழே உள்ள அட்டவணை கொண்டு ஒருவரின் அடிப்படை சம்பளத்தை கண்டுபிடித்து விடலாம்.
அரசுப்பணியில் சேர்ந்த ஓர் ஊழியருக்கு அடிப்படை சம்பளம், அகவிலைப்படி, வீட்டு வாடகை படி மற்றும் போக்குவரத்து படி என பொதுவாக அவரவர் வேலை செய்யும் நகரத்தை பொறுத்து வழங்கப்படும். இதை தவிர பலவிதமான படிகள் உள்ளன. பதவி, வேலையின் தன்மை, இடத்தின் சூழல் என பல்வேறு காரணிகளை கொண்டு படிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
நீங்கள் விரும்பும் அல்லது எதிர்பார்க்கும் வேலைக்கான முதல் மாத சம்பளத்தை அறிய Grade Pay அல்லது Level மற்றும் எந்த நகரத்தில் பணி புரிய வாய்ப்புள்ளது என தெரிந்தால், உங்களது குறைந்தபட்ச முதல் மாத சம்பளம் கூறிவிட இயலும்.
Leave a Reply