7வது ஊதிய குழு மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதில் மிக பெரிய மாற்றத்தை பரிந்துரை..?
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறித்து மீண்டும் ஓர் புதிய செய்தி நேற்று வெளியாகி உள்ளது.
“7வது ஊதிய குழு மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதில் மிக பெரிய மாற்றத்தை பரிந்துரை செய்ய இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.”
நேற்று பிரபல ஆங்கில நாளேடான ‘Indian Today’ தனது வலைத்தளத்தில், 7வது ஊதிய குழு குறித்த ஒரு சிறப்பு கட்டுரையினை வெளியிட்டது. அதில் 55 வயது அல்லது 33 வருட சர்வீஸ், இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவே ஓய்வு பெரும் வயது என்பதாக (ஊடக செய்திகள் தெரிவிப்பதாக) குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில், ஊதிய குழு மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை குறைக்க பரிந்துரை செய்ய முடியுமா..? என்ற கேள்வி பலரின் மனதில் எழுகிறது.
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதில் மாற்றத்தை கொண்டு வர விரும்பினால், அதற்கான விளக்கங்களுடன் பரிந்துரை செய்ய ஊதிய குழுவிற்கு உரிமை உள்ளது. அதை ஏற்பதும், மறுப்பதும் மத்திய அரசின் கையில் உள்ளது.
5வது ஊதிய குழு ஓய்வூதிய வயதை உயர்த்த பரிந்துரை செய்தது. அதன் படி, 1998 மே மாதம் முதல் 58 வயதில் இருந்து 60 வயதாக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்தது.
ஓய்வூதிய வயதில் மாற்றம் என்பதை கூட பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், ஊழியரின் வயதுடன் அவருடைய பணி காலத்தை தொடர்புபடுத்துவதை தான் பலரும் எதிர்க்கிறார்கள்.
ஒருவர் சிறப்பான செயல்பாடுகளுடன், அறிவுத்திறன் கொண்டு தனது இளமை பருவத்தில் அரசு பணியில் சேர்ந்தால், அவரின் ஓய்வூதிய வயது கிட்டத்தட்ட 7 வருடங்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
அரசு பணியில் உள்ள ஊழியர்கள், அதிலும் 40 வயதிற்கு மேம்பட்ட ஊழியர்கள் அனைவரும் இந்த வயது குறைப்பை எதிர்க்கிறார்கள். அவர்கள் முன்வைக்கும் முக்கிய கேள்விகள்….
7வது ஊதியக்.பரிந்துரை செய்துள்ள பனிக்காலத்திற்கு ஏற்ப ஓய்வு பெறும் வயதை 60ஆக மாற்றுவதை வரவேற்கிறொம்