புதிய வடிவமைப்பு மற்றும் பொலிவான தோற்றத்தில் DoPT இணையதளம்
“MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Department of Personnel & Training, இந்திய அரசாங்கத்தில் நிர்வாக ரீதியான மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தது.”
DoPT என சுருக்கமாக அழைக்கப்படும் Department of Personnel & Training-துறை அறியாத மத்திய அரசு ஊழியர்கள் இருக்க வாய்ப்பில்லை, அதிலும் குறிப்பாக அதன் இணையதளத்தை பார்வையிடாத ஊழியர்கள் மட்டுமல்லாது அதிகாரிகளும் மிகவும் குறைவு என்றே கூறலாம்.’ Indian Administrative Service என கூறப்படும் உயர் அதிகாரிகளின் நியமனத்தில் தொடங்கி அணைத்து ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சேவை விதிகளை வகுத்து, அரசு ஆணைகளாக வெளியிடுவது வரை பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில வருடங்களாக DoPT இணையதளத்தின் வளர்ச்சி மிகவும் பாராட்டத்தக்கது. புதிய அரசு ஆணைகளை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வெளியிடுவதுடன், பழைய அரசு ஆணைகளை பதிவிறக்கம் செய்ய வசதி மேற்கொண்டது, இத்தளத்தை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததில் இருந்தே உணரலாம்.
தற்போது புதிய வடிவில், தோற்றத்தில் புதிய அம்சங்களுடன் DoPT இணையதளம் மாற்றப்பட்டுள்ளது.
Leave a Reply